Sunday, August 17, 2008

Mayakkamaa kalakkamaa ( Sumaithangi )

ஒரு படத்தை ஆரம்பிக்கும் தருவாயில் அதன் தயாரிப்பாளர்கள் வியாபார ரீதியாக பல முடிவுகளை எடுப்பார்கள். பல சமயம் தங்களின் கருத்தை முன் வைப்பார்கள். அதில் தவுறு ஏதும் இல்லை என்பது என் கருத்து. லாபமோ / நஷ்டமோ அவர்தானே அனுபவிப்பது . பொதுவாக ஒரு நாயகன் படத்தின் முடிவில் தன்னுடய முயற்சியில் வெற்றி அடைவது போலத்தான் எல்லோருமே விரும்புவர். அதே முடிவையும் தயாரிப்பாளரும் பரிந்துரை செய்வார். இயக்குநரும் அந்த முடிவை எடுப்பார். ஆனால் திரு ஸ்ரீதர் முற்றிலும் மாறுபட்டவர். மறபிர்க்கு வேறாகவே துணிச்சலாக எடுத்து பழக்கப்பட்டவர்.

இயக்குநர் மேதை திரு ஸ்ரீதரும் மெல்லிசை மன்னர்களும் கவிஞர் கண்ணதாசனும் இணைந்து உருவாக்கிய படங்கள் எல்லாமே திரைக்காவியங்கள். 1960களில் இந்த மாபெரும் அணி பல காலத்தை வென்ற படங்களை தந்தன. அவற்றில் ஒன்று தான் 1962ல் உருவான சுமைதாங்கி காதல் மன்னன் ஜெமினி கணேசனை கதாநாயகனாக கொண்ட இந்த படம் பல ப்ரபல நட்சத்திரங்களையும் கொண்ட்து.. முத்துராமன் அண்ணனாகவும் பழம் பெரும் நகைச்சுவை நடிகர் சாரங்கபாணி தந்தையாகவும், நாட்டிய நடிகை எல்.விஜயலக்ஷ்மி தங்கையாகவும், நாகேஷ் நண்பனாகவும் நடித்தனர். அவர் தான் காதல் மன்னனாயிற்றே ! ஜோடியாக தேவிகாவும் அவரின் தந்தையாக வி.எஸ்.ராகவனும் ( ஜி.ஜியின் கல்லூரி ஆசரியர் ) உண்டு.

வாழ்கையை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு கல்லூரி இளைஞன் அவன் நினைத்து பார்க்காத மாற்றங்களயும் , சோதனைகளயும் , வேதனைகளயும் சிறுவயதிலேயெ சந்தித்து தொடர்ந்து தோல்விகளையே எதிர்கொள்வதால் அவன் இறுதியாக எந்த முடிவை எடுக்கிறான் என்பது தான் இந்த கதையின் மைய்யக்கருவாகும். இளம் காளை வயது. கல்லூரியில் படிப்பவர். வாழ்கையில் எந்த பொருப்பும் ஏற்க தேவையில்லாத சந்தோஷமான கனவுகளுடன் இருக்கும் ஒரு கால கட்டம் அது… ஓய்வு பெற்ற தந்தை ( சாரங்கபாணி ) ,ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அன்பான அண்ணன் முத்துராமன் அவரின் மனைவி. விளையாட்டு குணம் கொண்ட ஒரு தங்கை ( விஜயலஷமி ). இவர்களுக்கு மத்தியில் ஜெமினி கணேசன் என்று கதை துவங்கும். வீட்டின் முன்னறையில் அனைவரும் சந்தோஷமாக விளையாடுவது போல் தான் தான் அனைவரையும் அறிமுகப்படுத்துவார் ஸ்ரீதர். கல்லூரியின் ஒரு ஆசிரியர் வி.எஸ்.ராகவனின் மகளான தேவிகாவை கவர முடியுமா என்று நண்பர்கள் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்டு அவரிடம் பாடம் பயில்வது போல தினமும் வீட்டிற்கு வந்து ( அவர் இல்லாத நேரத்தில் தான் ! ) தேவிகாவிடம் மெல்ல மெல்ல தன்னுடைய நாடகத்தை நடத்த தேவிகாவும் தன் மனதை பறிகொடுக்கிறார். உண்மையை உணர்ந்த ஜெமினி தானும் தேவிகாவை விரும்புகிறார். இதற்கு வி.எஸ்.ஆர் முதலில் மறுத்தாலும் பிறகு சம்மதிக்கிறார். ஆனால் எல்லாம் சுபமாக முடிய வேண்டிய தருவாயில் தான் கதையில் திருப்பம் நேரிடுகிறது… முத்துராமன் பணி நீக்கம் செய்யப்பட வீட்டில் வருமையும் பண தட்டுப்பாடும் ஏற்படுகிறது… இதற்கிடையில் விஜயலஷமி ஒருவரை காதலிக்க அவருக்கு திருமணம் செய்ய வேண்டிய ஒரு கட்டாயம். ( அந்த காலத்தில் பெண்கள் 20 அல்லது 23 வயது தாண்டும் முன்னரே பெற்றொர் திருமணம் செய்விப்பர். ) அண்ணன் தங்கைக்கு முதலில் திருமணம் செய்துவிட்டுத்தான் தன்னைப்பற்றி நினைப்பர். முத்துராமனின் ஒரெ சம்பாத்தியத்தை நம்பியிருந்த குடும்பம் ..அடுத்த மாதம் செலவிற்கே வருவாயில்லாத இந்த சூழ்நிலையில் சாரங்கபாணியின் பணக்கார நண்பர் உதவிக்கு வருகிறார். ஆனால் அவர் விடுத்த ஒரு நிபந்தனை தன்னுடய உடல் ஊனமான பெண்ணை ஜெமினி திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதற்கு அவர் பதிலாக விஜயலஷ்மியின் திருமண செலவையும் ஏற்பதாக சொல்கிறார். ஒரு நல்ல வேலையும் தருவதாக சொல்கிறார் இதை கேட்ட சாரங்கபாணி, முத்துராமன், விஜயலஷ்மி எல்லோரும் குதூகலமடைகின்றனர்.வீட்டில் அனைவரும் கெஞ்ச தன்னுடய காதலை தியாகம் செய்ய துணிகிறார் ஜெமினி. இதன் மூலம் அனைவரும் பயன் அடைவர் என்பதை உணர்ந்த அவர், வேண்டா வெறுப்பாக திருமணத்திற்கு சம்மதிக்கிறார். செய்தியை அறிந்த தேவிகா அதிற்சி அடைகிறார். சாரங்கபாணியின் நண்பரோ தன் வாக்குப்படி பணமும் கொடுக்க விஜயலஷ்மியின் திருமணம் தடையின்றி நடைபெறுகிறது.. இச்சமயத்தில் முத்துராமன் ஜெமினிக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறார். அதாவது வேலையை தனக்கு கொடுத்து விடுவதால் வீட்டிற்கு மூத்த பிள்ளை என்ற பொருப்பும் …தம்பி மீண்டும் படிக்கலாம் என்ற நல்ல எண்ணத்தோடு சொல்வதால் இதற்கும் ஜெமினி ஒப்புக்கொள்கிறார். இது ஜெமினிக்கு ஏற்பட்ட முதலும் இரண்டும் , மூன்றான சோதனை இத்துடன் நின்றதா ??திருமணம் நடைபெறும் தினத்தன்று மணப்பெண்ணுக்கு ஜெமினி-தேவிகாவின் காதல் செய்தி தெரிய வந்து அவர் அதிர்சியால் வலிப்பு வந்து துடிக்க ( இது தான் அவரின் நோய் . ஆனால் ஜெமினிக்கு இது தெரியாது ) திருமணம் நிறுத்தப்படுகிறது. இது அவருக்கு ஏற்படும் நான்காவது சோதனை திருமணம் நின்று போக அவர் மீண்டும் தேவிகாவின் காதலை நாட வி.எஸ்.ராகவன் மறுக்கிறார். மாறாக வி.எஸ்.ஆர் அவருக்கு திருமணம் செய்வதில் முனைப்பு காட்ட இது ஜெமினியை மிகவும் வாட்டுகிறது… தனக்கு வந்த வேலையும் கை விட்டுப்போக அதுவும் ஒரு சோதனையாகிறது… ஒரு நாள் முத்துராமன் கோபத்தில் ஜெமினியை கடிந்து கொள்ள ( யத்தார்தமாக நடக்கும் இது ) .. தான் அவருக்கு தான் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் ஒருவரும் தன்னை புரிந்து கொள்ள வில்லையே என்ற வருத்ததில் தாங்க முடியாமல் ஜெமினி வீட்டை விட்டு தனியாக வந்து விடுகிறார்…. தன்னுடைய தவறை உணர்ந்த முத்துராமன், தேவிகா மற்றும் அனைவரும் வேண்டிகேட்டும் அவர் மறுத்து தனியாக விடும்படி கதறுகிறார்…. தனிமையில் தான் இது வரை பட்ட கஷ்டங்கள்…சோதனைகளை அவர் நினைத்து பார்க்கிறார்…இன்னும் எத்தனை நான் தான் இது போல் இருக்கும் என்று வருங்காலத்தை நினைத்து நொந்து போன சமயத்தில்…..திரு ஸ்ரீதர் ஒரு பாட்டினை புகுத்த நினைத்தார் போலும்… ஆம் ….. மயக்கமா …கலக்கமா…மனதிலே குழப்பமா…வாழ்க்கயில் நடுக்கமா ?? என்ற பாடல் தான் அது !! அடுத்தடுத்து சோதனைகளையே சந்தித்த ஒருவருக்கு மிகவும் ஆறுதலை அளிப்பது போன்று அமைந்த ஒரு அற்புதமான் பாடல் இது வரிகளை முதலில் பார்ப்போமே :

மயக்கமா …கலக்கமா… மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோரும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

ஏழை மனதை மாளிகையாக்கி இரவும் பகலும் காவியம் பாடு நாளைய பொழுதை இறைவனுக்களித்து நடத்தும் வாழ்வில் அமைதியை தேடு நடத்தும் வாழ்வில் அமைதியை தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு

ஒரு சோகமான , மென்மையான பிண்ணனியிசையோடு பாடலை துவக்கியிருப்பார்கள் நம் மன்னர்கள்…புல்லாங்குழலும், வயலினும் , பாங்கூசும் சேர்ந்து நம்மை உடனே படத்தின் சூழ்நிலைக்கு கொண்டு செல்வர். அங்கங்கு சில சமயம் ரிதம் கிடார் ஒலிக்கும்…. பல்லவிக்கு மூன்னிசை முடிந்தபின் ஒரு ஆழ்ந்த அமைதி……எந்த கருவியும் இசைக்காது ஒரு கணம்…..பின் P.B.ஏஸ்… துவங்குவார்…… அந்த அமைதி ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும். !!! பல்லவி முடிந்தவுடன் மீண்டும் புல்லாங்குழலிசை…அதே இனம் புரியாத சோகம்..தவிப்பு தெரியம் ஆனால் பாடல் முடியும் தருவாயில் அது தன்னம்பிக்கையை உருவாக்குவது போல் ஒலிக்கும் !! இது தான் உண்மையான் இசையாகும்….. ஒரு படத்தில் பாடலானது புகுக்தப்படக்கூடாது… அது படத்தின் ஜீவ நாடியாக இருக்க வேண்டும்…. இதை இந்த பாடலில் உணர்வீர்கள் !! பாடலானது மிகவும் மெதுவான நடையில் செல்லும்..அது ஜெமினியின் மனவேதனையை தீர்க்கும் வண்ணம் அமைந்திருக்கும்… இசையானது பட்த்தின் ஓட்த்தையும்….பாடலின் சூழ்நிலைமையும் அறிந்து அமைந்திருக்கும்…. P.B.ஸ்ரீநிவாஸ் மிகவும் அற்புதமாக பாடியிருப்பார்….. கதாநாயகனின் மனநிலையை புரிந்துகொண்ட்து போல் அவருக்கு ஆறுதலாக பாடியிருக்கும் ஸ்ரீநிவாஸ் போற்றத்தக்கவர் !! வரிக்கு வரி, தன்னுடய முத்திரையை பதிதிருப்பார்…. அவருக்கு துணையாக ஒரு ரிதம் கிடார் பிண்ணனி…… சில வரிகளை அவர் மீண்டும் மீண்டும் பாடி மேலும் மெருகு சேர்த்திருப்பார்…. கதாபாத்திரமாகவே மாறி பாடிய அவரை பாரட்ட எனக்கு வார்த்தைகளில்லை….

கவிஞரோ உலக வாழ்க்கையின் இயல்புகளை மிக அழகாக துல்லியமாக கொண்டு வருவார் தன்னுடைய எளிமையான் எழுத்து நடையில் எதுவுமே நிரந்தரமானது அல்ல …இன்பம்..துன்பம்..இரண்டும் சேர்ந்தது தான் வாழ்க்கை என்ற உண்மையை வியத்தகு வண்ணம் எழுதியிருப்பார் …. உனக்கும் கீழே உள்ளவர் கோடி…நினைத்து பார்த்து நிம்மதி நாடு…. இந்த வரிகளை நான் அடிக்கடி நினவுகூர்வேன் …… நிரந்தர வெற்றியோ அல்லது தோல்வியோ ….எவரும் அடைந்ததில்லை என்பதை எவ்வளவு எளிதாக ஒரு பாமரனும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதிய கவிஞ்ர் கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்…..

கச்சிதமான ஒளியமைப்பு…..வின்செந்ட்--பி.என்.ஸுந்தரம் இருவரின் கைவண்ணத்தில் வியத்தகு வண்ணம் கற்பனையோடு காட்சியமைதிருப்பர்….. நாயகன் ஜெமினியின்..நிழல் ஒரு சுவற்றின் மேல் விழுவதும்.. அது அவரின் மனசாட்சி போல நினைப்பதும் அற்புதமான ஒரு சிந்தனை திறன் !! பாடல் முழுவதும் அவரின் மனசாட்சி ஆறுதல் கூறுவது போன்ற அமைப்பு…கருப்பு வெள்ளை படமான இதில் ஒவ்வொரு வரிக்கும் ஒரு ஷாட்… ஜெமினியின் முகபாவங்களை மிகவும் அழகாக காட்டும். ஒரு இருண்ட அறையில் தன்னை ஒளித்துக்கொள்வது போன்ற காட்சியமைப்பு அற்புதமான் கருத்தோட்டம் !! அதில் …உனக்கும் கீழே உள்ளவர் கோடி என்ற வரிகள் வரும்போது…. ஜெமினி பின்புறம் செல்வதும் அவரின் நிழல்/மனசாட்சி முன்புறம் வருவதும் நம் கற்பனைக்கெட்டாத ஒரு காட்சியமைப்பு !!

ஜெமினியை பற்றி சொல்லவா வேண்டும் !!! கதாபாத்திரமாகவே மாறி நடித்த அவர் ஒரு மாபெரும் நடிகர் !! அவரை போன்று இயல்பான நடிகர்கள் மிக மிக சொற்ப்பம்…தொடர்ந்து சோதனைகளை சந்தித்து வரும் ஒரு மனிதனின் தவிப்பை காட்டியிருப்பார்…. தந்தையிடம் மரியாதை…அண்ணனிடம் பண்பு….தங்கயிடம் பாசம்..தேவிகாவிடம் உண்மையான அன்பு கொண்ட காதல் இவை அனைத்தும் கொண்ட ஒரு பாத்திரப்படைப்பு அவருக்கு..செவ்வனெ செய்வார்… முதல் பாதி உற்சாகம் கொண்ட ஒருவர். இரண்டாம் பகுதி முழுவதும் வேதனை நிறைந்தது…. இந்த படத்தில் இசை மிக மிக முக்கிய அம்சம் வாய்ந்த்து…..

மெல்லிசை மன்னர்கள் படம் முழுவதும் அற்புதமான பாடல்களை வழங்கியுள்ளனர்…. இரண்டு காதல் பாட்டு….இரண்டு தத்துவப்பாட்டு…. ஒரு தனிமை பாட்டு என ஒரு இசை விருந்தினை படைத்தனர். கதையின் தன்மைக்கேற்ப இசையை அமைத்த மேதைகள் …

சுமைதாங்கி போன்ற படத்தை தைர்யமாக எடுத்த திரு.ஸ்ரீதர் தமிழ் திரைப்பட வரலாற்றில் தலையாய இடத்தில் வைக்கபட வேண்டியவர் !!

No comments: