Sunday, August 17, 2008

Kaana vandha kaatchi enna velli nilave ( Bagyalakshmi )

பால்ய விவாகம் செய்யப்பட்டு சிறு வயதிலேயே தன் கணவன் இறந்து விட்டான் என்ற தவறான தகவலினால் சவ்கார் ஜானகி ஒரு விதவையாக வாழ்கிறார்..அருமை ஸ்நேகிதி இ.வி.சரோஜாவின் வேண்டுகோளின்படி அவர் வீட்டில் தங்குகிறார். ஒரு நாள் தான் விதவை அல்ல தன் கணவன் உயிருடன் தான் உள்ளார் என்றும் அது ஜெமினி கணேசன் தான் என்று அறிந்து ஒரு உற்சாகத்துடனும் பரபரப்புடனும் வருகையில் மிகப்பெரிய அதிற்சியாக தன் தோழி இ.வி.சரோஜாவும் ஜெமினியும் காதலர்களாக நிலவொளியில் உற்சாகமாக பாடிக்கொண்டிருப்பதை பார்க்கிறார்… அழகான நிலவொளியில் சரோஜா பாட அவர் வாழ்வழியாக சவ்காரின் மனநிலையை அற்புதமாக காண்பித்திருப்பார்கள் ! இம்மாதிரு சூழ்நிலையில் சவ்கார் பாடுவது போலிருந்தால் நன்றாக இராது என்பதால் சரோஜா மூலமாக நிலவை கருவாக பயன்படுத்தி அது சவ்காரின் தவிப்பை எதிரொலிப்பது போன்ற அமைப்பு ஒரு நல்ல திரைகதைக்கு சான்று…. வரிகளை படிப்போர் உடனே உண்மையினை உணர்வார்கள் !!

காணவந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டுவிட்ட கோலமென்ன வெள்ளி நிலவே

ஓடி வந்த வேகமென்ன வெள்ளி நிலவே நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே

நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகள் என்ன தன் நினைவு மாறி நின்றுவிட்ட வேதனை என்ன

இங்கு விளையாடும் காதலரை காண வந்தாயோ அவர் அறியாமல் பார்த்தபடி திகைத்து நின்றாயோ

காணவந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டுவிட்ட கோலமென்ன வெள்ளி நிலவே

ஓடி வந்த வேகமென்ன வெள்ளி நிலவே நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே

காதல் எங்கள் சொந்தம் என்று அறியவில்லையா நி கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா

உன் மோக நிலை மறந்துவிடு வெள்ளிநிலாவே வந்த மேகத்திலே மறைந்துவிடு வெள்ளிநிலாவே

காணவந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டுவிட்ட கோலமென்ன வெள்ளி நிலவே

ஓடி வந்த வேகமென்ன வெள்ளி நிலவே நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே

பாடலை துவக்குவதற்கு நம் மெல்லிசை மன்னர்கள் தேர்வு செய்த கருவிகள் ரிதம் கிடார், புல்லாங்குழல் , தபேலா, சிதார் , வயலின் மெல்லிய ரிதம் கிடார் துவக்கி மயக்க வைக்கும் புல்லாங்குழல் மூலம் நம்மை நிலவொளிக்கு அழைத்து செல்வர்… நாமெ குளிர்ச்சியான சூழ்நிலைக்கு போவது போன்ற உணர்வு தோன்றும் ! பின்பு சிதாரும் தபேலாவும் போட்டி போட்டாலும் தீடிரென்று வரும் கணீர் வயலினிசை சவ்காரின் அதிற்சியினை ப்ரதிபலிக்கும்… இடையிசையில் புல்லாங்குழலும் சிதாரும் நம்மை வேறு ஒரு உலகிற்கு அழைத்து செல்லும்… பாடலின் வெற்றிக்கு அதன் மெட்டும் துணை செய்கிறது… சரோஜாவின் உற்சாகமும் சவ்காரின் வேதனையும் ஒரே சமயத்தில் சந்தம் நமக்கு தரும்…. இரு கதாநாயகளின் முற்றிலும் மாறுபட்ட மனநிலையை தன் அமுத குரலின் மூலம் கொண்டு வருவார் பி.சுசீலா…

1961ல் வந்த இப்படத்தின் எல்லா பாடல்களும் மிகப்ப்ரபலம்

காதலெனும் வடிவம் கண்டேன்

காதலென்றால் ஆணும் பெண்ணும்

மாலை பொழுதின் மயக்கதிலே நான்

பார்தீரா அய்யா பார்தீரா

கண்ணே ராஜா கவலை வேண்டாம்

கதாபாத்திரங்களான ஜெமினி , இ.வி.சரோஜா மற்றும் சவ்கார் மூவரும் அற்புதமாக நடித்திருப்பார்கள் பல்லவியிலேயே சவ்காரின் பரிதவிப்பை கவிஞர் அழகாக சொல்வார் இந்த பாடலின் வெற்றிக்கு அதன் வரிகள் மிக இன்றியமையாத்து… இதில் கவிஞர் முக்கிய பங்கு வகித்தார்…

இளமையெல்லாம் வெரும் கனவுமயம் இதில் மறைந்தது சில காலம் தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம் என்று எழுதியவர் அல்லவா அவர் !! நிலவை முன்னிருத்தியே ஒரு கதையின் தன்மையை எழுதிய கவிஞரின் இந்த பாடல் காலத்தால் அழியாமல் இன்றும் கேட்கப்படுகிறது !

No comments: