மெல்லிசை மன்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் :
ஒரு நாள் வழக்கம்போல நானும் கவிஞரும் சந்தித்தோம்
கவிஞர் : என்னடா தம்பி வழக்கம்போல சந்ததுக்கா இல்ல சொந்ததுக்கா நான் : யோவ் ...ஏதோ வந்ததுக்கு எழுதாம நல்ல பாட்டா எழுதி கொடுயா நல்ல காதல் டூயட் வேணும் அன் யூஷுவலா இருக்கணும்
டேய். அப்ப என்னடா நான் இத்தனை நாள் நல்ல பாட்டே எழுதலையா ??
இல்ல நீங்க எழுதியிருக்கீங்க…. ஆமாம் நீங்க எதுக்கப்புறம் எதுங்கறீங்க அப்படீனு நான் கேட்டேன் ஆமாம்டா.
இது தாண்டா பல்லவி…. கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா மெட்டு போட்டதும் பாட்டு வந்ததா இல்ல பாட்டு வந்ததும் மெட்டு வந்ததா….அப்படினு அவர் கேட்டார்
இப்படித்தான் உருவாயிற்று இந்த பாடல் !
புகழ் பெற்ற பா வரிசையில் அமைந்த மற்றொரு நல்ல கதை அம்சம் கொண்ட பார்த்தால் பசி தீரும் நடிகர் திலகம் , ஜெமினி கணேசன், சாவித்ரி, சரோஜாதேவி, சவ்கார் ஜானகி அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்த படம்… ஜெமினியின் தங்கையான சரோஜாதேவிக்கு அவரின் நண்பனரான ( ஆனால் அவரின் அலுவலகத்தில் வேலை செய்பவர் ) நடிகர் திலகத்தின் மேல் காதல்…..இதை அறிந்தும் அறியாதவர் போல நம்மவர் அழகாக நடிப்பார் !!
ஒரு கனவு பாடலாக அமைந்த இந்த பாடலானது எம்.எஸ்.வி. - கவிஞர் கூட்டணியின் மிகச்சிறந்த கவிதை நயம் கொண்ட பாடல்களின் மிக மிக சிறந்ததில் ஒன்று என்பது எனது தாழ்மையான கருத்து
கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா மலர் மலர்ந்ததா நிலவு வந்ததா
பாடல் வந்ததும் தாளம் வந்ததா தாளம் வந்ததும் பாடல் வந்ததா
பாவம் வந்ததும் ராகம் வந்ததா ராகம் வந்ததும் பாவம் வந்ததா
கண் திறந்ததும் காட்சி வந்ததா காட்சி வந்ததும் கண் திறந்ததா
பருவம் வந்ததும் ஆசை வந்ததா ஆசை வந்ததும் பருவம் வந்ததா
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா பெண்மை என்பதால் நாணம் வந்ததா நாணம் வந்ததால் பெண்மை ஆனதா ஓடி வந்ததும் தேடி வந்ததும் பாடி வந்ததும் பாசம் வந்ததா
காதல் என்பதா பாசம் என்பதா கருணை என்பதா உரிமை என்பதா
Prelude எனப்படும் பல்லவி முன்னிசை இல்லாது துவங்கினாலும் அருமையான மெலடியோடு துவங்கும் பாடலில் வழக்கம்போல இசைஅரசி பி.சுசிலாவும் டி.எம்.எஸ்சும் தன் திறமையை காண்பிப்பர்.. மெல்லிசை மன்னர்களின் முத்திரை கொண்ட பாடல்…… புல்லாங்குழலும் , வயலின் துணை கொண்ட இண்டர்லூட்ஸ் பின்னிசையாக ஒரு டபுள் பாஸ் . ரிதம் கிடார் கூட மிக அழகாக !!! என்னை வியக்க வைத்த விஷயம் இந்த பாட்டின் சந்தம்….அற்புதமாக அதே சமயம் மிக எளிய நடை கொண்டது சரோஜாதேவி துவக்கும்போது சிவாஜி உம் என்று கேள்விக்கு யோசிப்பது போலவும்…இவர் நிலவு வந்தது என்று பாடும்போது அவரும் ஓஹோ என்று வினா எழுப்புவதும் நல்ல பாடல் அமைப்பு
நடிகர் திலகம் ராணுவத்தில் பணி புரிந்தவர் என்ற கதாபாத்திரம்… என்பதற்காக ஒரு மிடுக்கான ராணுவ மீசையுடன் மிக கம்பீரமாக வந்து பாடுவார்…ஆனால் போரில் அவரின் கால் ஊனமுற்றதால் ஒரு காலை ஊன்றிக்கோண்டே இருப்பார்….அது கனவுப்பாடலிலும் தொடரும்..!!! சரோஜாதேவி அழகான ஒரு இளம்பெண்னாக வந்து மிக உற்சாகத்துடன் பாடுவார்… எவ்வளவு அருமையான ஒரு பாடலை எவ்வளவு எளிதாக அமைத்தனர் அந்த காலத்தில் !!! பாடல் முடிந்தபின் நமக்கு எழும் ஒரு கேள்வி : மீட்டருக்கு மேட்டரா…அல்லது மேட்டருக்கு மீட்டரா !!
Songs like this once again confirm the fact that Kavignar & MSV besides challenging each other , also inspired between them , only for music lovers to receive infinite noof immortal songs & lyrics ...Is there any better combination than these two legends ?!
Friday, April 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment