Friday, April 18, 2008

அந்த நாள் ஞாபகம் நென்ஜிலே வந்ததே

சில வருடங்களுக்கு முன் திரு டி.எம்.எஸ் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் குறிப்பிட்டார் :
நான் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு திரைஅரங்கில் ஆங்கில படம் ஒன்றை பார்த்தேன் அதில் ஒருவர் இன்னொருவரோடு நடந்து கொண்டே பாடுவது போல அமைந்த்து எனக்கு மிகவும் பிடித்தப்போனது…. அதிசயமாக எம்.எஸ்.வி. சில நாட்கள் கழித்து என்னிடம் இதை போன்ற ஒரு பாடலை வைத்து இசை அமைக்க வேண்டும் என்று தன் ஆசையை தெரிவித்தார். நான் உடனே கேட்டேன்…என்ன நீங்களும் அந்த படத்தை பார்த்தீர்களா ?? அவர் ஆம் என்றார் உற்சாகத்துடன்…. இப்படி தான் இந்த பாடலின் கருவானது உருவாயிற்று !!!

1968ல் ஏ.வி.எம். நிறுவனத்தினர் தயாரிக்க கிருஷ்ணன் - பஞ்ஜு இயக்கத்தில் அமைந்த வெற்றி படம் தொழிலதிபரான நடிகர் திலகம் மிக சோர்வுடனும் உற்சாகமில்லாதவராக இருப்பதை கண்டு அவர் மனைவி சவுகார் ஜானகி ஊட்டியில் உள்ள அவரின் ஓய்விடத்தில் சிறிது நாள் தங்கியிருந்து வரும்படி வற்புருத்த கூட அவரின் பால்ய நண்பரும் இன்றைய கார் ஓட்டுனருமான மேஜர் சுந்தர்ராஜனும் சேர்ந்து போகும்படி சொல்ல இருவரும் செல்கின்றனர் துணைக்கு வீட்டின் பணியாளான சிவகுமாரும் ( அவருக்கும் முதல் மனைவி வாணிஸ்ரீக்கும் பிறந்தவர் படம் முடிவில் இந்த உண்மை தெரியும் ) பாரதியும் ( மேஜரின் பெண்னும் சவுக்காரின் வளர்ப்பு மகளூம் ) செல்வர் ஒரு அழகான இடத்திற்கு அனைவரும் சென்றவுடன் நம் நடிகர் திலகத்திற்கு உற்சாகம் பிறக்கும் உடனே பழைய பள்ளி நாட்களை நினைவுகூர்ந்து மேஜருடன் அளவளாவுவார். சிறு வயதில் தான் ஒரு ஓட்டப்பந்தய வீரன் என்றும் பல முறை வென்றவன் என்று சொல்லி உடனே மேஜரிடம் சவால் விடுகிறார் ஒரு சின்ன ஓட்டத்திற்கு. அதில் முதலாவதாகவும் வருவார் அந்த குதூகலத்தில் மனம் விட்டு சிரித்துக்கொண்டே இந்த பாடலை அவருடைய குரலிலேயே துவக்குவார்…
அந்த நாள் ஞாபகம் நென்ஜிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே இந்த பகுதியிலிருந்து டி.எம்.எஸ். முழு பாடலையும் பாடுவார் பல்லவியின்போது டி.எம்.எஸ் பாடும் ஒவ்வொரு வரியின் பின்னும் போட்டி போடும் ஒரு வயலினிசை ….அவர் நிறுத்தியவுடன் அது தொடர்வது அழகு… ஏதோ சோகத்தை சொல்லப்போகிறார் என்பது போல அது முடிக்கும் இந்த நாள் அன்றுபோல் இன்பமாய்யில்லையே அது ஏன் ஏன் ஏன் நண்பனே ?? பல்லவி முடிந்தவுடன் தொடர்ந்து வயலின் …அதற்கு பின் ட்ரம்பெட் கம்பீரமாக ஒலித்து க்டைசியில் ரிதம் கிடார் நம்மை சரணத்திற்கு அழைத்து செல்லும் பாடல் முழுவதும் ஒரு அழுத்தமான பாஸ் கிடாரின் துணை வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்

ஒரு பெரிய பணக்கார தொழில் அதிபராக இருந்தாலும் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளை நினைத்து வருந்திக்கொண்டே வாழும் பாத்திரம் கொண்ட நடிகர் திலகம் தன் அருமை மனைவியை கூட காப்பாற்ற முடியாத, தந்தை பேச்சினை மீறமுடியாத நிலை பார்ப்போர் வியக்கும் வண்ணம் தன் முகபாவதை மாற்றி மாற்றி அற்புதமாக நடித்திருப்பார் இந்த பாட்டிலே !! பாடலின் துவக்கத்தில் மிக உற்சாகமாக நடிப்பவர்…போக போக தன் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை எண்ணி தன் இயலாமையை நினைத்து நொந்து போய் அழுவார் ….. தவறுகள் செய்தவன் எவனுமே சிரிக்கிறான் அழுகிறான் தவறுகள் செய்தவன் எவனுமே அழுகிறான்…. இந்த வரிகளின்போது அவரின் முகத்திற்கு மிக அருகே காமிரா சென்று நிற்கும்… உடல் குலுங்க கதறி அழுவார்… அற்புதமான நடிப்பு…. அவர் நடித்த பாடல்களிலே மிக மிக சிறந்தவைகளின் பட்டியலில் இந்த பாடல் இடம் பெறும் …. பாடலின் மற்றொரு அம்சம் அதன் காட்சியமைப்பு… சிவாஜிக்கு பெரும்பாலும் காமிரா அருகருகே சென்று அவரின் முகபாவத்தினை அழகாக காண்பிக்கும்…

ரஜினியை எல்லோரும் ஸ்டயில் கிங் என்று சொல்கிறார்களே !!! தயவுசெய்து எல்லோரும் இந்த பாட்டினை உற்று பாருங்கள்….
பல்லவி முடிந்தவுடன் ஒரு தனி காட்சி..சிவாஜி வாக்கிங் தடியை தன் முதுக்குக்குப்பின் வைத்தபடி ஒரு பார்வை சற்றுமுற்றும் பார்பாரே அது.. பாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் தன் நடையை மாற்றும் வண்ணம் வாக்கிங் ஸ்டிக்கினை சுழற்றும் லாவகம்…
உயர்ந்தவன்…தாழ்ந்தவன்…எனும் வரிகளின்போது ஸ்டிக்கினை கீழே போடும் விதம்…
முழுக்கை சட்டையினை மடித்துக்கொண்டு நடந்துவரும் போது மேஜர் ..பள்ளியை விட்டதும் …என்று சொல்லும்போது …
சிவாஜி மேல் நோக்கியபடி ஒரு பார்வை..கைய்யை கழுத்துபுறம் வைத்துகொண்டு இப்படி பாடல் முழுவதும் தன்னை நிறைத்துக்கொள்ளும் அவர் தான் முதல் ஸ்டயில் கிங்

எத்தனையோ பாடல்களை ( எம். ஜி. ஆர் , ஜெய் , ரவிசந்திரன் )மற்றவர்களுகேற்ரார்போல் பாடிய டி.எம்.எஸ்…இந்த பாடலின் மூலம் தான் எல்லாரையும் விட நடிகர் திலகத்திற்குதான் மிக பொருத்தமான முறையில் பாடினார் என்ற உண்மையை நாம் உணர்வோம் !! சிவாஜி கணேசன் ஓடி முடித்தவுடன் மூச்சு வாங்கி கொண்டே பாடுவது போல அமைய வேண்டும் அதற்காக ஒலிப்பதிவு அறையில் தானும் ஓடி ஓடி உடனே பாடிய இந்த இசை மேதையின் உழைப்பிற்கும், திறமைக்கும் ஈடு இணை யாரும் இல்லை !!! அவரே மூச்சு வாங்கும் சப்தம் கேட்டும் !!

மேஜர் தன் பாத்திரத்தை அழகாக செய்வார்…நிம்மதியில்லாத தன் பால்ய நணபனின் மன நிலையை புரிந்து கொண்டு ஆறுதல் அளிப்பது போன்ற வரிகளை இடை இடையே பேசுவார் அதில் எனக்கு மிகவும் பிடித்தவை : பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம் கடமையும் வந்தது கவலையும் வந்தது

வயலின் கருவியை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த பாடல்… உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லயே நம்மிடம் இந்த வரிகள் முடிந்தவுடன் தொடர்ச்சியாக டி.எம்.எஸ், மேஜர் மற்றும் எம்.எஸ்.வி. மூவரும் உரத்த சப்தத்தில் சிரித்து ஓய்ந்தவுடன் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் வயலின் அமைப்பு.. அதை ஆமோதிப்பது போல ஒரு ட்ரம்பெட் …..வியக்க வைக்கும் இசை அமைப்பு !!! பல்லவி மற்றும் முதல் சரணத்திலும் மிக உற்சாகமான இசையை அமைத்து கடைசியில் சிவாஜி அழும் கட்ட்த்தில் ஒரு மெல்லிய சோகம் கொண்ட வ்யலின் இசையை சேர்த்து….இறுதியாக விசில் சப்த்த்தோடு ஓய்வு பெறுவதாக அமைத்த நம் மெல்லிசை மன்னர் பாடல் முழுவதும் தம் முத்திரையை பதித்திருப்பார் !!

பாசமென்றும் நேசமென்றும் வீடு என்றும் மனைவியென்றும் நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதி எங்கே ….அமைதி எங்கே ??உடனே ஆறுதல் அளிப்பது போல ஒரு மென்மையான வயலின் இசை !! எல்லா சரணத்தின்போதும் ஒரு மெல்லிய பிரஷ் ட்ரம்மிங்..அறுமையான் தேர்வு !!!

பாடலை எழுதியது கவிஜர் வாலி ! அனுபவபூர்வமான வரிகள் … ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் இந்த பாட்டின் வார்த்தைகளை மனதில் உச்சரிப்பார்கள்….

பாட்டின் வரிகள் :

சிவாஜி : அந்த நாள் ஞாபகம் நெஞ்ஜிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே இந்த நாள் அன்றுபோல் இன்பமாய்யில்லையே அது ஏன் ஏன் ஏன் நண்பனே ??

மேஜர் : பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம் இதை தவிர வேறு எதை கண்டோம்

சிவாஜி : புத்தகம் பைய்யிலே புத்தியோ பாட்டிலே பள்ளியை பார்த்த்தும் ஒதுங்குவேம் மழையிலே
நித்தமும் நாடகம் நித்தமும் நாடகம் நினைவெல்லாம் காவியம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லயே நம்மிடம்

மேஜர் : பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம் கடமையும் வந்தது கவலையும் வந்தது

சிவாஜி : பாசமென்றும் நேசமென்றும் வீடு என்றும் மனைவியென்றும் நூறு சொந்தம் வந்த பின்பும் தேடுகின்ற அமைதி எங்கே ….அமைதி எங்கே ??

மேஜர் : அவரவர் நெஞ்ஜிலே ஆயிரம் ஆசைகள் அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்

சிவாஜி : சிறியவன் பெரியவன் நல்லவன் கெட்டவன் உள்ளவன் போலவன் உலகிலே பார்க்கிறோம் எண்ணமே சுமைகளாய் இதயமே பாரமாய் தவறுகள் செய்தவன் எவனுமே சிரிக்கிறான் அழுகிறான் தவறுகள் செய்தவன் எவனுமே அழுகிறான்….

இதை போன்ற அபூர்வமான பாடல்களை எப்படி ஒலிப்பதிவு செய்தார்களோ ?? நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்….அடிக்கடி நினைத்து பார்ப்பேன் நான்

கொடி அசைந்ததும் காற்று வந்ததா

மெல்லிசை மன்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் :

ஒரு நாள் வழக்கம்போல நானும் கவிஞரும் சந்தித்தோம்

கவிஞர் : என்னடா தம்பி வழக்கம்போல சந்ததுக்கா இல்ல சொந்ததுக்கா நான் : யோவ் ...ஏதோ வந்ததுக்கு எழுதாம நல்ல பாட்டா எழுதி கொடுயா நல்ல காதல் டூயட் வேணும் அன் யூஷுவலா இருக்கணும்

டேய். அப்ப என்னடா நான் இத்தனை நாள் நல்ல பாட்டே எழுதலையா ??

இல்ல நீங்க எழுதியிருக்கீங்க…. ஆமாம் நீங்க எதுக்கப்புறம் எதுங்கறீங்க அப்படீனு நான் கேட்டேன் ஆமாம்டா.
இது தாண்டா பல்லவி…. கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா மெட்டு போட்டதும் பாட்டு வந்ததா இல்ல பாட்டு வந்ததும் மெட்டு வந்ததா….அப்படினு அவர் கேட்டார்

இப்படித்தான் உருவாயிற்று இந்த பாடல் !

புகழ் பெற்ற பா வரிசையில் அமைந்த மற்றொரு நல்ல கதை அம்சம் கொண்ட பார்த்தால் பசி தீரும் நடிகர் திலகம் , ஜெமினி கணேசன், சாவித்ரி, சரோஜாதேவி, சவ்கார் ஜானகி அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்த படம்… ஜெமினியின் தங்கையான சரோஜாதேவிக்கு அவரின் நண்பனரான ( ஆனால் அவரின் அலுவலகத்தில் வேலை செய்பவர் ) நடிகர் திலகத்தின் மேல் காதல்…..இதை அறிந்தும் அறியாதவர் போல நம்மவர் அழகாக நடிப்பார் !!

ஒரு கனவு பாடலாக அமைந்த இந்த பாடலானது எம்.எஸ்.வி. - கவிஞர் கூட்டணியின் மிகச்சிறந்த கவிதை நயம் கொண்ட பாடல்களின் மிக மிக சிறந்ததில் ஒன்று என்பது எனது தாழ்மையான கருத்து

கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா மலர் மலர்ந்ததா நிலவு வந்ததா

பாடல் வந்ததும் தாளம் வந்ததா தாளம் வந்ததும் பாடல் வந்ததா
பாவம் வந்ததும் ராகம் வந்ததா ராகம் வந்ததும் பாவம் வந்ததா
கண் திறந்ததும் காட்சி வந்ததா காட்சி வந்ததும் கண் திறந்ததா
பருவம் வந்ததும் ஆசை வந்ததா ஆசை வந்ததும் பருவம் வந்ததா

வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா பெண்மை என்பதால் நாணம் வந்ததா நாணம் வந்ததால் பெண்மை ஆனதா ஓடி வந்ததும் தேடி வந்ததும் பாடி வந்ததும் பாசம் வந்ததா
காதல் என்பதா பாசம் என்பதா கருணை என்பதா உரிமை என்பதா

Prelude எனப்படும் பல்லவி முன்னிசை இல்லாது துவங்கினாலும் அருமையான மெலடியோடு துவங்கும் பாடலில் வழக்கம்போல இசைஅரசி பி.சுசிலாவும் டி.எம்.எஸ்சும் தன் திறமையை காண்பிப்பர்.. மெல்லிசை மன்னர்களின் முத்திரை கொண்ட பாடல்…… புல்லாங்குழலும் , வயலின் துணை கொண்ட இண்டர்லூட்ஸ் பின்னிசையாக ஒரு டபுள் பாஸ் . ரிதம் கிடார் கூட மிக அழகாக !!! என்னை வியக்க வைத்த விஷயம் இந்த பாட்டின் சந்தம்….அற்புதமாக அதே சமயம் மிக எளிய நடை கொண்டது சரோஜாதேவி துவக்கும்போது சிவாஜி உம் என்று கேள்விக்கு யோசிப்பது போலவும்…இவர் நிலவு வந்தது என்று பாடும்போது அவரும் ஓஹோ என்று வினா எழுப்புவதும் நல்ல பாடல் அமைப்பு

நடிகர் திலகம் ராணுவத்தில் பணி புரிந்தவர் என்ற கதாபாத்திரம்… என்பதற்காக ஒரு மிடுக்கான ராணுவ மீசையுடன் மிக கம்பீரமாக வந்து பாடுவார்…ஆனால் போரில் அவரின் கால் ஊனமுற்றதால் ஒரு காலை ஊன்றிக்கோண்டே இருப்பார்….அது கனவுப்பாடலிலும் தொடரும்..!!! சரோஜாதேவி அழகான ஒரு இளம்பெண்னாக வந்து மிக உற்சாகத்துடன் பாடுவார்… எவ்வளவு அருமையான ஒரு பாடலை எவ்வளவு எளிதாக அமைத்தனர் அந்த காலத்தில் !!! பாடல் முடிந்தபின் நமக்கு எழும் ஒரு கேள்வி : மீட்டருக்கு மேட்டரா…அல்லது மேட்டருக்கு மீட்டரா !!

Songs like this once again confirm the fact that Kavignar & MSV besides challenging each other , also inspired between them , only for music lovers to receive infinite noof immortal songs & lyrics ...Is there any better combination than these two legends ?!